<<>>பூமியில் சொர்க்கம்-1.<<>>



அதன் 40 கிலோமீட்டருக்கு மேலான பள்ளத்தாக்குப் பரப்பில், 9 திபெத் இன கிராமங்கள் சிதறிக் கிடத்தின்றன.
இஸ்ரேலிருந்து வந்த திரு Nerohem Yam, சீனாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் செய்ய விரும்புகின்றார்.
Jiu zhai gou பற்றி அவர் கூறியதாவது,இவ்விடம், சீனாவில் மிகுதியும் எழிலானது. இதர இடங்களில் இது போன்ற மலைகளையும் ஏரிகளையும் நான் பார்த்ததில்லை. இவை, இதர அமைத்துக்கும் மேலானது என்றார்.நீரினால், Jiu zhai gou அற்புதமானதாக உள்ளது. நீர் என்பது, அதன் ஆத்மா. இவ்விடத்தின் பள்ளத்தாக்குகளில், 100க்கும் அதிகமான சிறிய பெரிய வண்ண உயர் மலைகளும், ஏரிகளும் இங்கும் அங்குமாக காணப்படுகின்றன.
உள்ளூர் திபெத் இன மக்கள், இதை ஹைசி என அழைக்கின்றனர். அதாவது, கடலின் மகன் என இது பொருட்படுகின்றது.Jiu zhai gouவில், சான்காய் என்னும் மிகப் பெரிய ஏரி, அருகில் பார்ப்பதற்கு நீர் பசுமையானது. ஏரியின் அடித்தளம் வரை நீர் தெளிந்து ஓடுகின்றது. தூரத்தில் பார்க்கும் போது, ஏரிப் பரப்பு, நீளமானது. அலையில்லாமல் அமைதியானது. இரு கரைகளில் பசுமையான மலைகள் தலைகீழாக இந்த ஏரியில் கிடக்கின்றன.

Jiu zhai gouவிலுள்ள நீர், ஏரிகளில் இருக்கும் போது அதிகமாக அமைதியாகவுள்ளது. ஆனால், மரங்கள் நிறைய வளர்ந்துள்ள மலையிலிருந்து செங்குத்தாக வீழ்ந்த போது, நீர் ஆர்ப்பரிக்கும் அருவியாக மாறிவிடும். Jiu zhai gouவில் 17 நீர் அருவிகள் உள்ளன.
பார்ப்பதற்கு, நீர்மட்டத்தின் ஆழம் அதிகமல்ல. ஆனால், அகலமான நீர் திரை, பாளை முழுவதிலும் தொங்கவிடப்படுவது போல் காட்சியளிக்கின்றது. அவற்றில் நோழ்லான் எனும் நீர் அருவி, சீனாவில் மிக அகலமான நீர் அருவி என்று புகழ்பெற்றுள்ளது. நீர் ஓட்டம், நூறு மீட்டர் அகலமுடைய மலைச்சரிவின் விளம்பில் கீழே நோக்கி ஓடுகின்றது. இது, நீர்த் திரையாகக் காட்சி அளிக்கின்றது. சூரிய ஒளியில் இது, வானவில் போல் மாயக் காட்சி அளிக்கின்றது.

மிக அற்பதமானது. இது தான், Jiu zhai gou. பூமியில் சொர்க்கம் என சீனர் அணைக்கின்றனர். Jiu zhai gou 1992ஆம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக இயற்கை மரபுச் செல்வப்பட்டியலில் சோர்க்கப்பட்டது.இங்கு வசிக்கும் திபெத் இன மக்களின் கருத்தில், Jiu zhai gou, தங்களது புனி. மலையும் நீரும் ஆகும். இங்குள்ள மலைகள், நீர், வனம், கற்கள் எல்லாம் கடவுளால் அளிக்கப்பட்டவை. திபெத் இன இளம் பெண் இனாமான்ஹுன் பேசுகையில், Jiu zhai gouவிலுள்ள புல், செடி, ஒவ்வொன்றையும் கவனமாக பேணிக்காக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அனைத்துக்கும் ஆத்மா உண்டு என்று எங்கள் உள்ளூர் திபெத் இனத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மலைகள், ஆறுகள், மரங்கள் எல்லாம், கடவுளால் அளிக்கப்பட்ட அன்பளிப்புகள். மனிதகுலம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அவற்றைச் சீர்குலைக்க காரணம் ஏதுமில்லை என்றார்.இனாமான்ஹுனும் அவரது திபெத் இனத்தவர்களும் இன்று வரையிலும் Jiu zhai gouவில் வாழ்கின்றனர். அவர்கள், மதக்கொடிகள், வெள்ளைக் கோபுரங்கள் மூலம் பயணிகளுக்கு திபெத் இன நடையுடை பாவனைகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் விரும்தோம்பல் மிக்கவர்கள். பயணிகள் திபெத் இனத்தவர்களின் வீட்டில் விருந்தினராக வெண்ணெய் தேனீரை அருந்து, பார்லி மதுவைக் குடித்துக் கொண்டே திபெத் இனத்தவர்கள் ஆடிப்பாடுவதைக் கண்டு ரசிப்பது, மகிழ்ச்சியான ஒன்றாகும்.
Jiu zhai gouவைப் பார்வையிட்ட பின், மனித சொர்க்கத்தில் தொடர்ந்து சுற்றுலா செல்ல, கார் மூலம் ஹுவான் லுன் எனும் காட்சிப் பிரதேசத்துக்குச் செல்லலாம். இவ்விரண்டுக்கும் இடையில் தூரம் 130 கிலோமீட்டர் மட்டுமே. Jiu zhai gouவைப் போல, 1992ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால், ஹுவான் லுனும் உலக இயற்கை மரபுச் செல்வத்தின் பெயர்பட்டியலில் சேர்க்கப்பட்டது.
நீர் என்பதே இங்குள்ள முக்கியக் காட்சியாகும்.ஹுவான் லுனில் நீர் காட்சியைக் கண்டு ரசிக்கும் போது, மலையிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி பார்க்க வேண்டி ஏற்பட்டது. பள்ளத்தாக்கில் சுமார் 4 கிலோமீட்டர் நீளமான மெல்லிய மஞ்சள் நிறத் தரையில் 3000க்கும் அதிகமான குளங்கள் இருக்கின்றன. படி வயல் போல் அவை காணப்படுகின்றன. சூரிய ஒளியில் அவை மின்னி ஒளி வீசுகின்றன.
0 Comments:
Post a Comment
<< Home